370 கோவில்களுக்கு பூஜை பொருட்கள்
ADDED :3070 days ago
கரூர்: கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில், பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பூஜை பொருட்களை வழங்கி பேசியதாவது: தமிழக அரசு, கோவில்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம கோவில்களை புதுப்பிக்க, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆயிரம் கோவில்களில், 2.44 கோடி ரூபாய் செலவில், பூஜை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள, 296 சைவ கோவில்கள், 74 வைணவ கோவில்கள் என, 370 கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அறநிலையத்தறை உதவி கமிஷனர் சூரியநாராயணன் , ஆர்.டி.ஓ.,க்கள், பாலசுப்ரமணியன், சக்திவேல், செயல்அலுவலர் ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.