உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்
*யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி கூட சுழன்றபடியே இருக்கிறது. உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்.
*உள்ளத்தில் இருக்கும் அன்பை கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் கேட்பாய்.
*உறுதி மிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கட வுளின் அருள்கிடைப்பது நிச்சயம்.
*பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மன அமைதியும் கெடும்.
*நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.
*மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிட ம் இருந்து உன்னைக் காத்துக் கொள்.
*விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு, வெறுப்பு இல்லாதவன் கட வு ளுக்குச் சம மாவான்.
*கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக் குள் காட்சியளிப்பதைக் காணலாம்.
*ஆணவம் இருக்குமிடத்தை விட்டுக் கடவுள் கோடிமைலுக்கு அப்பால் ஓடி விடுவார்.
*இந்த மண்ணில் மனித வாழ்க்கை சில காலம் தான். அதற் குள் நல்லவர்களுக்கு தொண்டு செய்துவிடு.
*நோய்க்கு சிறிதும் இடம் கொடுத்து விடாதே. கடவுளை வழிபடு வதற்கு உடல் நலம் மிக அவசியமானது.
*பகுத் தறிவு இருந்தும் கடவுளை நினைக்காதவன், மிருக நி லைக்கு தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்.
*மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படுவதைக் காணலாம். ஆனால், குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும்.
*நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அதை வைத்திருப்பவனும் நல்லவனாக இருந்தால் தான், நல்ல விஷயங்களை எழுத முடியும்.
*நியாயமற்ற வழியில் கிடைத்த பணத்தை தொடாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.
*பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து, அருளையும் தேடிக் கொள். ஏனென்றால் இந்த உலகமே கடவுளின் குடும்பம்.
*கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடல்நிலையும் நன்றாக இருக்கும்.
*இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.
*சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல, உயிர்கள் பூமியில் சில காலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல. சொல்கிறார் சாந்தானந்தர்