ஆழமான பக்தி வேண்டும்
ஆண்டவர் தன்னிடம் உருக்கமாக செய்கிற ஜெபங்களுக்கு உடனடியாக செவி சாய்ப்பார் என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு ஆலயத்தில் பாடகர் குழு ஒன்று இருந்தது. அதில் முப்பது ஆண்டுகளாக ஒருவர் பாடி வந்தார். அவரது பாடல் உள்ளத்தை உருக்குவதாக இருக்கும். ஆனால், பாடகர் குழு தலைவர் வேறு மாதிரியாக நினைத்தார்.இவருக்கு வயதாகி விட்டது. குரல் கரகரப்பாக இருக்கிறது. இவரை நீக்கி விட்டு ஒரு இளைஞனை நியமிக்க வேண்டும்என கருதி, அவரை நீக்கி விட்டார். அன்று அவரது கனவில் ஒரு தேவதூதன் வானில் இருந்து வந்தான். பாடல் குழு தலைவரே! முப்பது ஆண்டுகளாக பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர், அந்த முதியவரின் குரலை சமீப காலமாக கேட்காததால் மிகுந்த கவலையோடு இருக்கிறார், என்றான். திடுக்கிட்டு விழித்த தலைவர் நடுங்கி விட்டார். முதியவரை மீண்டும் பாடச் செய்தார். குரலை விட, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் பக்தியைத் தான் கடவுள் விரும்புகிறார்.