உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில் ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு. யாருக் கா வது ஜுரம் வந்தால், இங்குள்ள சிவ னிடம் பிரார்த் தனை செய் து விட்டு சிவனே என் றி ருப் பார்கள். ஜுரம் குண மா னதும் சுவா மிக்கு மிளகு சாதம் நிவே தனம் செய் வார்கள். ஒரு சிவராத்திரி... எப்போதும் சிவராத்திரியன்று காஞ்சி மகா பெரியவர், நான்கு கால பூஜை செய்வது வழக்கம். அவரைத் தரிசிக்கவும் பூஜையைப் பார்க்கவும் இரவில் கூட்டம் அலை மோதும். அன்று நள்ளிரவு 2:00 மணி அளவில், பெரி யவர் ஜுர ஹரேஸ்வரர் கோயிலுக்குப் புறப்பட்டார். அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர் தவிப் போடு கூறினார்:இன்று முழு வதும் நீங்கள் உப வாசம் (பட்டினி). இர வெல்லாம் கண் விழித்து பூஜை செய்த களைப்பு வேறு. மடத்தி லேயே இத் தனை நேரம் சிவ பூஜை தானே செய்தீர்கள். உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் நடந்து போய் ஜுர ஹ ரேஸ் வ ரரைத் தரிசிக்கத்தான் வேண்டுமா? ஓய்வெடுங்களேன்!

பக்தரைக் கனிவோடு பார்த்த பெரியவர், பதில் கூறவில்லை. நடந்தேகோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதைக் கண்டு அங்கு ஏராளமானோர் குழுமினர்.எல்லோருக்கும்  ஆசி கூறிய பெரியவர், மடத்திற்கு வந்து சேர்ந்தார். மறுநாள் காலை பிரசாதத்துடன், பெரியவரைப் பார்க்க வந்தார் வறுமையால் மெலிந்த தோற்றமுடைய ஜுர ஹஹேஸ் வரர் கோயில் அர்ச்சகர். தன்னைக் கோயிலுக்குச் செல்ல வேண்டாமே என வேண்டிய பக்தர் அருகே இருப்பதைக் கண்ட பெரியவர் அர்ச்சகரிடம், சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது? என்றார்.பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணை யாக வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக் தர்கள் வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!  இல்லா விட்டால் சுமாராக எவ்வளவு வரும்? என்ன, ஒரு இரு நூறு ரூபாய் தட்சணை கிடைத்தாலே பெரிது. அந்த ஏழை அர்ச் சகர் முகத்தில் நல்ல வருமானம் கிடைத்தது பற்றிய மகிழ்ச்சி தென்பட்டது. உடனே பெரியவர் அந்த பக்தரை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை ஆயிரம் விஷயங்களைப் பேசிற்று. ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய அவரின் தங்கமான மனதை புரிந்து கொண்ட, பக் தரின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது. திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !