உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன் ?

சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன் ?

படைப்புக் கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத் திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப்படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றி ருக்கிறார். இந்த 32 பிரம் மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலை யாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடி யுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டை யோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடரா ஜரை வழி படும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறு கிறது. இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத் துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !