கிருஷ்ணகிரி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள ஜெகினிகொல்லை கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று
நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 25 காலை சுத்தி புண்யாவாசனம், பக்தர்களுக்கு ரக்?ஷா பந்தனம், கரிகோல உற்சவம், பால்குட ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை
மங்கள இசை, விஷ்வக்சேனர் ஆராதனை, வாசுதேவ புண்யா வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு, கலச பிரதிஷ்டை, துவார பூஜை,
கலச ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, விசஷே ஹோமம், மகா மங்களார்த்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 11:00 மணிக்கு, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, குரு ராமானுஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, யந்தரஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால கலச பூஜை ஹோமம், தத்வ ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, உபசார பூஜை, தூப, தீப, நைவேத்யம், மகா மங்களார்த்தி ஆகிய
நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.