நாகலிங்கேஸ்வரர்!
ADDED :3421 days ago
ஆந்திரா மாநிலம், ஆனந்தப்பூர் மாவட்டத்தில் ஹேமாவதி என்ற பெயரில் மிகப் பழமையான நகரம் உள்ளது. 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய இங்கு தொட்டேஸ்வர சுவாமி, மல்லிகார்ஜுன சுவாமி, சித்தேஸ்வர சுவாமி என்ற பெயரில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. தொட்டேஸ்வர சுவாமி கோயிலில் உயரமான மேடையில் ஏழு தலைகள் கொண்ட ஒரு நாகம் பிரமாண்டமாகக் காணப்படுகிறது. இதன் நடுவில் கருங்கல்லாலான லிங்கம் உள்ளது. இவரை நாகலிங்கேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இங்கே ஒரு வளாகத்தில் சைவ- வைணவக் கோயில்கள் அருகருகே உள்ளன. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இக்கோயில்கள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு மிளிர்கின்றன. இதை கொரண்ட்லா கோயில்கள் என்று அழைக்கிறார்கள்.