பதவி!
ADDED :3421 days ago
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்றால் பட்டினி கிடந்து, தனியாக, தூங்காமல் விழித்திருப்பது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. பசித்திரு அதாவது, சுறு சுறுப்பாய் இருப்பவனிடம்தான் பசி இருக்கும். எனவே, எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். தனித்திரு- கற்றவற்றை எல்லாம் செயல்படுத்த மற்றவர்களிடமிருந்து தனித்தன்மையோடு இருக்க வேண்டும். விழித்திரு - எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அப்படியிருந்தால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பதங்களின் முதல் எழுத்தையும் இணைத்தால் வரும், பதவி தானே உன்னைத் தேடி வரும்.