உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் அணியக்கூடாது என்பது சரிதானா?

தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் அணியக்கூடாது என்பது சரிதானா?

சாஸ்திரங்களில் இது இரு வகையாக இருக்கிறது. தர்ஜனீ என்று வெள்ளியில் செய்த மோதிரம், பவித்ரம் என்று தங்கத்தில் செய்த மோதிரம் இவைகளை தகப்பனார் இருக்கும்போது போட்டுக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தகப்பனார் காலமான பிறகுதான் கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்றபோது, ஸுத்தியாகிற தூய்மை வேண்டும் என்பதற்காக அதைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்தது. சிலர், சில சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். தகப்பனார் இருக்கும்போது தங்கத்தால் ஆன பவித்ரத்தை அணிந்து கொள்கிறார்கள். இது அவரவர் தேசத்தை, அவரவர் குல ஆசாரத்தை அனுசரித்து வந்தது. பெரும்பாலும் தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் போட்டுக் கொள்ளும் வழக்கம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !