உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரமும் நெல்மணிகளும்!

வைரமும் நெல்மணிகளும்!

குப்பையைத் தூக்கிப்போடும் போது, தவறிப்போய் தன் கையில் இருந்த வைரங்கள் நிறைந்த பையையும் சேர்த்துப் போட்டுவிட்ட ஒருவர். அதைக் கண்டெடுப்பதற்காக குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தார். அப்போது, கோழி ஒன்றும் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டு இருந்தது. அதன் காலுக்குக் கீழே வைரப் பை இருந்ததைக் கண்ட அன்பர், ஏய் கோழியே.... உன் காலுக்குக் கீழே கிடக்கும் வைரத்தோட மதிப்பு உனக்குத் தெரியுமா? அது தெரியாமல் அதை மிதிச்சுக்கிட்டு நிற்கிறாயே? என்று சத்தம் போட்டார். உடனே கோழி அவரிடம் உன்னோட காலுக்குக் கீழே நீ மிதிச்சுக்கிட்டு நிற்கற நெல்மணிகளோட மதிப்பு உனக்குத் தெரியுமா? என்று சத்தமாகக் கேட்டதுடன், தள்ளி நில், எனக்குப் பசிக்கிறது. என்று அவரை நகரச் சொல்லிவிட்டு, நெல்மணிகளைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது. மதிப்பு மிகுந்தது எது? வைரங்களா, நெல்மணிகளா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !