பேச்சு வேறு.. மனசு ...!
ADDED :3418 days ago
உலகம் என்று தோன்றியதோ அன்றே பொய்யும், பித்தலாட்டமும் தோன்றி விட்டது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் பெருத்து விட்டனர். ஒரு பெண்ணை சகோதரி என அழைப்பவனின், உள்ளத்துப் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வது கேவலமாகவும், பயமாகவும் இருக்கிறது. இதுபற்றி இயேசு, அவர்களின் உள்ளம் அன்பொழுக பேசுகின்றது. உள்ளமோ நேர்மையற்ற பொருளைத் தேடி ஓடுகிறது, என்றார் இப்படிப் பட்டவர்களிடம் இருந்து தப்பிக்கவும் இயேசு வழி சொல்கிறார், எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர் என்று. ஆம்...மனிதர்களை விட கடவுளை நம்புங்கள். அவரிடம் நம் பாதுகாப்பை ஒப்படைத்து விடுங்கள். இவ்வாறு செய்தால், தீயவர்களை அடையாளம் காணும் சக்தி தானாகவே கிடைத்து விடும்.