உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை

குளித்தலை: குளித்தலை அடுத்த, கூடலூர் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடந்த பூஜையில், சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரூர், ராஜாபட்டி, கூடலூர் உள்ளிட்ட, எட்டு கிராம மக்கள் பங்கேற்றனர்.

* லாலாப்பேட்டை கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் எழுந்தருளி லாலாப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து, வரும், 10 வரை, பல்வேறு உபயதாரர்கள் சார்பில், பூஜைகள் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !