உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்

திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்

திருப்புத்துார், திருப்புத்துார் அருகே திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் கோயில் ஆனிப் பெருந்திருநாளை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. ஜூன் 26ல் வாஸ்து பூஜை, 27 ல் கொடியேற்றத்துடன் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளலுடன் காப்புக்கட்டி துவங்கியது. ஜூலை 1ல் திருக்கோளநாதர்-ஆத்மநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல்தேரில் சுவாமியும், இரண்டாவது தேரில் அம்பாளும் எழுந்தருளினார். காலை 9:10 மணி அளவில் சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்க ஐந்துகோயில் தேவஸ்தான ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சகதியாயிருந்த மண் தரையில் அடிக்கடி தேர் சக்கரம் சிக்கியதால் மிகவும் தாமதமாக தேர் நகன்று சென்றது.

இன்று பகல் 11:00 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தம் கொடுத்தலும், நாளை சுவாமி மலை ஏறுதலுடன் விழா நிறைவடையும். திருப்புத்துார், திருப்புத்துார் அருகே திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் கோயில் ஆனிப் பெருந்திருநாளை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. ஜூன் 26ல் வாஸ்து பூஜை, 27 ல் கொடியேற்றத்துடன் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளலுடன் காப்புக்கட்டி துவங்கியது. ஜூலை 1ல் திருக்கோளநாதர்-ஆத்மநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல்தேரில் சுவாமியும், இரண்டாவது தேரில் அம்பாளும் எழுந்தருளினார். காலை 9:10 மணி அளவில் சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்க ஐந்துகோயில் தேவஸ்தான ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சகதியாயிருந்த மண் தரையில் அடிக்கடி தேர் சக்கரம் சிக்கியதால் மிகவும் தாமதமாக தேர் நகன்று சென்றது. இன்று பகல் 11:௦௦ மணிக்கு சுவாமிக்கு தீர்த்தம் கொடுத்தலும், நாளை சுவாமி மலை ஏறுதலுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !