உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அன்னதானப்பட்டி: மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், அன்னதானப்பட்டி, சங்ககிரி பிரதான சாலையில் உள்ள அன்னதான மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை, 3ல் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை, மஹா கணபதி வழிபாடு, வருண பூஜை, யாக சாலை, மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து, மூலாலய விமானம், மூலவர்கள் கணபதி, சுப்ரமணியர், மாகாளியம்மன், ஒண்டி வீரமுனியப்பன் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தசதானம், தசதர்சனம், மஹா தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.

* சேலம் அடுத்த, மன்னார்பாளையம், எம்.பாலப்பட்டியில் உள்ள ஸ்ரீநகர் ஐயப்பா ஆசிரமத்தில், புதிதாக கட்டப்பட்ட ஐயப்பன் கோவில், கன்னிமூல கணபதி, மாளிகைபுரத்தம்மனுக்கு மஹா கும்பாபி ?ஷகம், தியான மண்டபம் திறப்பு, கொடிமரம் பிரதிஷ்டை ஆகிய முப்பெரும் விழா, நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மந்திரங்கள் ஓத, புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலம் எடுத்துவரப்பட்டு, 10:00 மணிக்கு மேல், கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என, கோஷமிட்டனர். தொடர்ந்து, ஐயப்பன், கன்னிமூல கணபதி, மாளிகைபுரத்தம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், லட்சார்ச்சனை, கற்பூர தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபாடு நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !