நெல்லையப்பர் கோயிலில் நாளை (ஜூலை 7) தேரோட்டம்
ADDED :3037 days ago
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவையொட்டி நாளை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் நடக்கும் ஆனித்திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவில் சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். நாளை 7ம் தேதி காலை 8.45 மணி முதல் 9.15 மணிக்கு சுவாமி தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேரும் ஒன்றாகும். காந்திமதியம்மன் தேர், சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியனவும் ரதவீதிகளில் வலம் வரும். தேரோட்டத்திற்காக நாளை நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மாற்றுப்பணி நாளாக ஜூலை 15ல் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும்.