உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செல்லுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை, மதுரை செல்லுார் காளியம்மன் கோயில் தெரு உச்சினி மாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 4 ம் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை மங்களவாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி நடந்தன. பிறகு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. காலை 8:00 மணிக்கு உச்சினி மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ரகு பரசுராமபட்டர் பூஜை செய்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !