கருப்பண்ணசாமி, விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3022 days ago
சென்னிமலை: சென்னிமலை அடுத்த, எல்லைக்கிராமம், பாலக்காட்டுபுதூரில், பழமையான நாவலடி கருப்பண்ணசுவாமி மற்றும் கன்னிமார் சுவாமி கோவில் உள்ளது. கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, கடந்த, 4ல், விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. பாலக்காட்டுபுதூர், ராமலிங்கபுரம் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர்.
* ஈங்கூர் அடுத்த செங்குளம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த, 5ல் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கலசங்கள் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.