வரும் 9ல் மல்லூரில் குரு பூர்ணிமா உற்சவம்
ADDED :3021 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மல்லூர் ஜெய் சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவ விழா, வரும், 9ல் நடக்கிறது. காலை, 4:30 மணியளவில் வைகறை ஆரத்தி, கணபதி ஹோமம் நடக்கவுள்ளது. காலை, 7:30 மணியளவில், மூலவருக்கு அபிஷேகம், தத்தாந்தேரய அஷ்டடோத்திர நாமாவளி பூஜை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு சாய் பஜன், மாலை, 6:00 மணிக்கு தூப் ஆரத்தியை தொடர்ந்து, பூக்களால் அலங்கரிப்பட்ட பல்லக்கில் பாபா பவனி வருதல் நடைபெறுகிறது. அன்று முழுவதும், சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்துள்ளனர்.