திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்!
ADDED :5083 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம், டிச. 7ல் பட்டாபிஷேகம், டிச., 8 காலை 8 மணிக்கு தேரோட்டம், மாலை 6.15 மணிக்கு மலை மீதுள்ள மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுதல், டிச. 9ல் தீர்த்த உற்சவம் நடக்கின்றன.விழா நாட்களில், தங்கமயில், வெள்ளி யானை, அன்னம், ஷேசம், தங்க குதிரை உட்பட பல வாகனங்களில் சுப்ரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிப்பர். விழா ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.