சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :3077 days ago
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரனை என 6 கால பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முரளிதரஸ்சுவாமிகளின் சீடர் கிருஷ்ண சைதன்ய தாஸ், ராம நாமம் குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில், ராம நாமத்தை தினமும் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள், விலகி ஓடும் தீமைகள் குறித்தும், தினமும் ராம நாமத்தை சொல்லி வர மனதில் நினைப்பவை நடக்கும், என விளக்கினார்.