உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லைப்பிடாரியம்மனுக்கு கற்பூரம் ஏற்ற அனுமதி

எல்லைப்பிடாரியம்மனுக்கு கற்பூரம் ஏற்ற அனுமதி

சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பண்டிகை சிறப்பு வாய்ந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள், சிறப்பு பூஜை செய்வர். கடந்த ஆடி., 1ல், பக்தர்கள் கொண்டுவரும் கற்பூரம் தரமற்றதாக இருப்பதாக கூறி, கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், அங்கு கற்பூரம் ஏற்ற தடை விதித்தார். நெய் தீபத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, தற்போது கற்பூரம் ஏற்ற, கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சுரேஷ்குமார் கூறுகையில், ”தற்போது விற்கப்படும் கற்பூரங்களில் கலப்படம் இருப்பதால், தடை விதிக்கப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதால், தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் நலன் கருதி, கற்பூரம் வைப்பதை, பக்தர்கள் தாங்களாகவே நிறுத்திவிட்டு, நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசிக்கலாம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !