வைர முனீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3046 days ago
தாரமங்கலம்: வைர முனீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. தாரமங்கலம் அடுத்த மாட்டையாம்பட்டியில் உள்ள வைர முனீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆடிப்பெருவிழா நடந்தது. அதில், ஏராளமானோர் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலி கொடுத்து, வைர முனியப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கோவி லைச் சுற்றி வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து வந்த தேரில், வைர முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.