உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் வாசலில் 15 கிலோ வெள்ளி விநாயகர்

கோவில் வாசலில் 15 கிலோ வெள்ளி விநாயகர்

துாத்துக்குடி: கயத்தாறு அருகே கோவில் வாசலில், 15 கிலோ வெள்ளியிலான விநாயகர் சிலையை வைத்து சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மெய்தலைவன் பட்டியில், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, நேற்று காலை, 2 அடி உயரமும், 15 கிலோ எடையும் கொண்ட வெள்ளி முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலை இருந்தது. சிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, திருட்டு சிலையா, யார் வைத்தது என்பது குறித்து, கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !