உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபாளையத்தம்மனுக்கு சிறப்பு வழிபாடு

பெரியபாளையத்தம்மனுக்கு சிறப்பு வழிபாடு

மயிலம் : மயிலம் அடுத்த தென்பசியார் குளக்கரையில் உள்ள பெரியபாளையத்தம்மனுக்கு, ஆடித் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து, நேர்த்தி கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !