மழை வேண்டி வருண ஜப யாகம்
ADDED :2987 days ago
ராசிபுரம்: பொன்பரப்பிப்பட்டி, சுப்ரமணியர் கோவிலில் வருண ஜப யாக பூஜை நடந்தது. வெண்ணந்தூர் அருகே, பொன்பரப்பிப்பட்டி, ஆலாம்பாளையம், வடுகம்பாளையம், பாறைக்கொட்டாய் கிராம மக்கள் ஒன்றிணைந்து, பொன்பரப்பிப்பட்டி சுப்ரமணியர் கோவிலில், மழை வேண்டி வருண ஜப யாகத்தை நடத்தினர். நேற்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தன்வந்திரி யாகம் நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் செய்து சப்த கன்னிமார்களுக்கு கலச அபிஷேகம் மற்றும் வள்ளி தெய்வானை சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.