தர்மபுரியில் ராகவேந்திர சுவாமி ஆராதனை விழா
ADDED :2987 days ago
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள உடுப்பி புத்திகே மட கிளையில், ராகவேந்திர சுவாமியின், 346வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா, கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மத்ய ஆராதனை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 11:30 மணிக்கு ரதோற்சவம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, புத்தூர் நரசிம்ம நாயனக் குழுவினரின் கச்சேரி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.