பாலாற்றுத்தீவு கோவிலில் மீண்டும் வழிபாடு துவக்கம்
ADDED :2954 days ago
கடலூர்: கடலூர், பாலாற்றுத்தீவு சாத்தனாரப்பன் கோவிலில், ஊரணிப்பொங்கல் உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
கூவத்துார் அடுத்த கடலூரில், பாலாறு இரண்டாக பிரிந்து, ஆற்றின் இடையே , வெங்காட்டுத்திட்டு என அழைக்கப்படும் தீவுப்பகுதி உள்ளது. விவசாயத்திற்கு மட்டுமே பயன்படும் அத்தீவில், சாத்தனாரப்பன் கோவில் உள்ளது. விழுதுகளே இல்லாத பெரிய ஆலமரத்தின் கீழ், ஒன்பது செங்கற்கள் நடப்பட்டு, திறந்த வெளி கோவிலாக விளங்குகிறது. கோவிலுக்கு, ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததால், நீண்ட காலம் வழிபாடு இல்லை. மீண்டும் வழிபாடு துவக்க முடிவெடுத்த பக்தர்கள், தற்போது ஊரணி பொங்கல் படைத்து,கோலாகல உற்சவம் கொண்டாடினர். இதற்காக அவர்கள், ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரை கடந்து சென்றனர்.