உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?

சிதிலமடைந்த சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?

ஸ்ரீபெரும்புதுார்: பேரிச்சம்பாக்கத்தில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ள, சிவன் கோவிலை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பேரிச்சம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, பழமை வாய்ந்தஅகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமைஆனது.நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவில் பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்து வந்ததால், இடியும் நிலையில் உள்ளது.சிவன் சன்னதி, அம்மன் சன்னதியுடன், பெரிய குளமும் உள்ளது. பராமரிப்பு இல்லாததால், இந்த கோவில் மீது மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், கோவிலுக்கு முன் இருந்த மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. மேலும், கோவிலின் விமானம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கோவில் கருவறையை சுற்றி ஏராளமான புற்றுக்கள் உள்ளன. இங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைவதால், கோவிலுக்குள் செல்ல அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இந்நிலையிலும்,அப்பகுதியை சேர்ந்த சிலர் மாதந்தோறும் பிரதோஷ தினத்தில், பூஜை செய்து வழிபடுகின்றனர்.கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !