உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரள முறைப்படி குமரியில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி

கேரள முறைப்படி குமரியில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி

நாகர்கோவில்: கேரள முறைப்படி குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடட்டம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் கிருஷ்ணஜெயந்தி விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. ஆனால் கேரளாவில் நேற்று கொண்டாடப்பட்டது. கேரள ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் குமரி மாவட்ட கோயில்களில் நேற்று கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்பட்டது. சிறுவர் சிறுமியர் கிருஷ்ணன் வேடம் அணிந்து பல்வேறு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது.நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நள்ளிரவில் கிருஷ்ணன் பிறப்பும், அதை தொடர்ந்து பூஜைகளும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !