உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில் மகாளய அமாவாசை வழிபாடு

மாமல்லபுரத்தில் மகாளய அமாவாசை வழிபாடு

மாமல்லபுரம்; மகாளய அமாவாசை நாளான நேற்று, மாமல்லபுரத்தில், ஏராளமானோர் மூதாதையரை வழிபட்டனர்.இந்து மத பாரம்பரிய கலாசார வழிபாடுகளில், மகாளய, ஆடி அமாவாசை நாட்கள் முக்கியமானது. இந்நாட்களில், நம் மூதாதையர், இப்பூவுலகிற்கு வந்து, அவரவர் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக, ஐதீக நம்பிக்கை. அவர்களை, பிற நாட்களில் வழிபட தவறினாலும், இந்நாட்களில், அவர்களை வழிபட்டு, ஆசி பெறுவது சிறப்பு. ஆன்மிக திருத்தல சிறப்புபெற்ற கடலோர புனித இடங்களில், இவ்வழிபாடு பிரசித்தி பெற்றது. மகாளய அமாவாசை நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் கோவில் அமைந்துள்ள, மாமல்லபுரத்தில், திருக்குளம், கடற்கரை பகுதிகளில், ஏராளமானோர் இவ்வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !