ஸ்ரீபாத மண்டபம்
ADDED :2966 days ago
திருமலைநம்பி, ஏழுமலையானுக்கு தினமும் அடிவாரத்தில் இருந்து தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள், அடிவாரம் வந்த அவர் ராமானுஜருடன், ராமாயணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. நண்பகல் வந்துவிட்டது. திருமலைநம்பி வருத்தத்துடன், உச்சிக்காலம் வந்துவிட்டதே! பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லாமல் அபச்சாரம் செய்து விட்டேனே!, என்று கண் கலங்கினார். அவரைக் காக்க, பெருமாளே இறங்கி வந்து பூஜையை ஏற்றுக் கொண்டார். பெருமாள் அங்கு நின்றதன் அடிப்படையில், அவரது பாதங்கள் வடிக்கப்பட்டுள்ளன. திருப்பதி மலையடிவாரமான அலிபிரியில் இருந்து மலையேறிச் செல்லும் நடைபாதையில், இந்த பாதமண்டபம் உள்ளது.