பாலமலை முருகன் கோவிலில் படிபூஜை விழா
ADDED :2991 days ago
கரூர்: பவித்திரம் பாலமலை முருகன் கோவில் படி பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கரூர், பவித்திரம் அடுத்த பாலமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை விழா நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். பின், விநாயகர் வழிபாட்டுடன் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்து. தொடர்ந்து கோவிலின், 55 படிகளுக்கும் தீபம் ஏற்றி திருப்புகழ் பாடி, படிபூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.