குன்னுார் உத்தரிய மாதா திருவிழா
ADDED :2931 days ago
குன்னுார்: குன்னுாரில் உத்தரிய மாதா ஆலயத்தின், 113வது ஆண்டு திருவிழா நடந்தது. குன்னுார் அருகே வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில், பாபு கிராமம் உள்ளது. இங்கு, 113 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாய உத்தரிய மாதாவின் ஆலயத்தின், ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலிகள், ஆராதனை நடந்தன. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் அன்பின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, புனித சூசையப்பர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆடம்பர தேர்பவனி வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் நடந்தது. த�ொ டர்ந்து துாயஉத்தரிய மாதா பஜனை சங்கங்களின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.