உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க ரதத்தில் சுவாமி உலா

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்க ரதத்தில் சுவாமி உலா

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான நேற்று(செப்.28) மாலை தங்கரத உலா நடைபெற்றது.ரத புறப்பாட்டின் போது காட்டப்பட்ட ஆரத்தியினை பக்தர்கள் ஒரு சேர கை நீட்டி வழிபட்டனர்.

திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்.27ல் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் (செப்.28) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். மாலை தங்கரத உலா நடைபெற்றது.ரத புறப்பாட்டின் போது காட்டப்பட்ட ஆரத்தியினை பக்தர்கள் ஒரு சேர கைநீட்டிவழிபட்டனர். அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !