உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் சிறப்பு பூஜை

தேனி கோயில்களில் சிறப்பு பூஜை

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந் தது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அல்லிநகரம் பெத்தாட்சி விநாயகர் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேசகந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் பக்தர்கள் வீடுகள், நிறுவனங்களிலும் சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தது.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர், மாரியம்மன், கம்பம்ரோடு காளியம்மன் உட்பட கோயில்களில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வீடுகளில் பள்ளி மாணவர்கள் சரஸ்வதி வழிபாட்டில் பங்கேற்றனர். இன்று, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷக ஆராதனைகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !