உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல் மாணிக்கம் கோயிலில் அக்.28ல் திருப்புத்தரி பூஜை

கூடல் மாணிக்கம் கோயிலில் அக்.28ல் திருப்புத்தரி பூஜை

திருச்சூர்: கேரளா திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் திருப்புத்தரி பூஜை அக்.,28ல் நடக்க உள்ளது.பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். அக்.,28 ல் நடக்க உள்ள புத்தரி பூஜைக்காக, 20 கி.மீ.,ல் பொற்றா என்ற இடத்தில் இருந்து புதிய அரிசி, காய்கறிகளை பக்தர்கள் நடந்தே எடுத்து வருவர். இந்நிகழ்ச்சி அக்.,27ல் நடக்கிறது. சுவாமிக்கு படைக்க பொருட்கள் எடுத்து வரப்படும் இந்நிகழ்வு தண்டிக வரவு எனப்படுகிறது.சுவாமிக்கு படையல் செய்த பின், பக்தர்களுக்கு புத்தரிசி விருந்து வழங்கப்படும். இது அக்.,28 காலை 11:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். இந்த விருந்தை சாப்பிட, கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவர். மறுநாள் மிகவும் புனிதமான முக்குடி என்ற பூஜை நடக்கிறது. இதில் பழங்கால சாஸ்திர முறைகளின் படி மூலிகைகளால், நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கப் பட்டு சுவாமிக்குநைவேத்தியம் செய்யப்படும். இதனை ஆயுர்வேத வைத்தியர்களான முட்டஞ்சேரி மூஸ் குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். இந்த மருந்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் பற்றிய ரகசியம் காக்கப்படுகிறது. அக்.,29 காலை 7:00 முதல் 11:00 மணி வரை மருந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். வயிற்று நோய்களை, இந்த மருந்து பிரசாதம் குணமாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விபரங்கள் அறிய 0480 - 282 6631ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !