அறுபத்துமூவர் திருவீதி உலா: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2935 days ago
சேலம்: சுப்ரமணியர் கோவிலில், அறுபத்துமூவர் திருவீதி உலா நடந்தது. சேலம், அம்மாபேட்டை, குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், அறுபத்துமூவர் திருவீதி உலா நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில், விநாயகர், 63 நாயன்மார், சிவன், பார்வதி ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவீதி உலா நடந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சொக்கநாதர் தம்பதி உள்பட 63 நாயன்மார்கள், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர். கோவிலில் தொடங்கிய வீதி உலா, திரு.வி.க., பாதை, புகையிலை மண்டி, மிலிட்டரி சாலை வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.