பரமாசார்யாளின் பாதரட்சை தரிசனம்!
ADDED :3295 days ago
மகாபெரியவா உபயோகப்படுத்தின பாதரட்சைகளை தரிசனம் பண்ணினாலே பாவங்கள் எல்லாம் கரைஞ்சுடும். எல்லா மங்களமும் சேரும். பரமாசார்யா உபயோகப்படுத்தின பாதக் குறடுகளை வைச்சு பூஜை பண்ணற பலப்பல பக்தர்கள் இன்னிக்கு உலகம் முழுக்க இருக்கா. அப்படி நியஜெர்சியில் வசிக்கிற இந்திய பக்தர் ஒருத்தர்கிட்டே இருக்கற மகாபெரியவளோட பாதரட்சைகள்தான் இவை. ஆசார்யாளோட திருப்பாதங்களைத் தாங்கற மகாபாக்யம் பெற்ற இந்தப் பாதக் குறடுகள்ல அவர் பாதத்துல இருந்த திவ்ய ரேகைகள் கூட பதிஞ்சிருக்கறாப்புல தெரியறதை அதிசயமாச் சொல்றா பக்தர்கள். மகாபெரியவாளோட திவ்யமான பாதக் குறடுகளை தரிசியுங்கள், உங்கள் நியாயமான இஷ்டமெல்லாம் ஈடேறும்.