உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதாகவே பாருங்கள்

நல்லதாகவே பாருங்கள்

இயேசுநாதர் மக்களிடம், உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும், என்கிறார். இதன் விளக்கம்: உன் கண்கள், ஒன்றை கெட்டதாக பார்த்தால், அது கெட்டதாகவே தோன்றும். உன் மனம் கெட்டதை நினைத்தால், கெட்டதே கண்ணில் படும். ஒருவரை ஒருவர் தெரியாத ஆணும், பெண்ணும் எங்காவது பேசிக் கொண்டிருந்தால், அதை தவறாக ஏன் கருத வேண்டும்? அவர்கள்  பொது விஷயங்களை பேசிக் கொண்டிருக்கலாம் என நினைத்தால், அங்கே நல்லதே கண்ணுக்கு தெரியும். விரசமான பார்வையுடன் நோக்கினால், அவர்கள் மோசமானதை பேசுகிறார்களே என எண்ணத் தோன்றும். எனவே எதைப் பார்த்தாலும், பேசினாலும் நல்லதையே நினையுங்கள். நல்லதே நமக்கும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !