கேன்பரா முருகன் கோயில்
ADDED :3288 days ago
சுற்றிலும் குன்றுகள் சூழ, இயற்கையான எழிலோடு கூடிய டாரில்ஸ் பகுதியில் இந்தக்கோயில் அமைந்துள்ளது. இத்தல முருகப்பெருமானை, ‘கேன்பரா முருகன்’ என அழைப்பர். 1997ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்தக் கோயிலில் விநாயகர், சிவபெருமான், முருகன் - வள்ளி, தேவசேனா மற்றும் மஹாவிஷ்ணு - ஸ்ரீதேவி, பூதேவி, நடராஜர், துர்கா, லட்சுமி, சரஸ்வதி, பைரவர், நவக்கிரகம் என பல தெய்வ மூர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலை மேலும் விஸ்தரித்து, தமிழக அறுபடை வீடுகளையும் இக்கோயிலினுள் அமைக்க திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.