நியூ சவுத்வேல்ஸ் முருகன் சன்னிதி
ADDED :3288 days ago
ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்களால் முதன் முதலில் எழுப்பப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்த வெங்கடேஸ்வரா திருக்கோயில்! இக்கோயிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் பக்தர்கள் பலராலும் மிகவும் விரும்பி வணங்கப்படுகிறார். கோயிலில் 63 நாயன்மார்கள் மற்றும் 12 ஆழ்வார்களின் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். இங்கே சிவபெருமான், முருகப்பெருமான், பாலாஜி ஆகியோருக்குத் தனித்தனியாக சன்னிதிகள் அமைந்துள்ளன.