உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 27 முறை பாட வேண்டிய பாடல்

27 முறை பாட வேண்டிய பாடல்

நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில், அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் என்னும் நுõலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்கிறார். விரதமிருப்பவர்கள் இந்தப் பாடலை 9 அல்லது 27 முறை பக்தியுடன் பாடுங்கள். நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள்என் செயும் கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும்    (இரண்டு பாதங்கள்),
சிலம்பும்    (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும்    (இரண்டு சலங்கையும்),
தண்டையும்    (இரண்டு தண்டைகள்),
சண்முகமும்    (ஆறு முகங்கள்)
தோளும்    (12 தோள்கள்)
கடம்பும்    (கழுத்திலுள்ள கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !