வயிற்றுவலிக்கு முக்குடி பிரசாதம்
ADDED :3274 days ago
கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா அருகிலுள்ள கூடல் மாணிக்கத்தில் ராமரின் சகோதரர் பரதனுக்கு கோயில் உள்ளது. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையில் வாசனைத் திரவியம் ஏதும் இடம் பெறுவதில்லை. அறுவடை செய்யப்பட்ட புதிய நெல்லில் தயாரான அரிசியை ஐப்பசி திருவோணத்தன்று நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். இதன் மறுநாள் முக்குடி பிரசாதம் படைத்து வழிபடுவர். வயிற்றுவலி தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.