இந்த வாரம் என்ன?
நவ.18: அமாவாசை விரதம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் நடையழகு சேவை
நவ.19: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம், திருஷ்டி கழிக்க நல்ல நாள்
நவ.20: கார்த்திகை முதல் சோமவாரம், சிவாலயங்களில் சங்காபிஷேகம்தரிசித்தல், சங்கரன்கோவில் கோமதிஅம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சந்திர தரிசனம், கரிநாள்
நவ.21: ரம்பா திரிதியை, நகை வாங்க நல்லநாள், சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், மூர்க்க நாயனார் குருபூஜை
நவ.22: சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், சிறப்புலிநாயனார் குருபூஜை
நவ.23: சுபமுகூர்த்த நாள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், பழநி முருகன் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்
நவ.24: வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் 11:29 – 12:05 மணி, சஷ்டி, திருவோண விரதம்