சிவன் கோயில் பரிவாரங்கள்
நடைமுறையில் அஷ்ட பரிவாரங்கள் எனப்படும் எட்டு பரிவார தெய்வங்கள் சிவன் கோயில்களில் உண்டு என்பதை அறிவோம். சமீபத்தில் பழைய புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் சிவன்கோயிலில் இடம்பெற வேண்டிய 22 வகை பரிவார தெய்வங்களைப் பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது. அதுகுறித்து உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். கிராதார்ச்சுனர், விருஷபாருடர், சக்ரதான மூர்த்தி, காமாரி, கல்யாண சுந்தரர், பிட்சாடனர், கங்காளர், கஜசம்ஹாரர், விஷ்ணு பிரசாதர், சந்திர சேகரர், உமாசகித சதாசிவர், ஹரிஹரர், அர்த்தநாரீசர், சோமாஸ்கந்தர், விஷபாகரணர், திரிபுர சம்ஹாரர், கால சம்ஹாரர், நடராஜர், கங்காதரர், வைவாகிகர், சரபர், ஏகபாதர். இந்தத் தெய்வ மூர்த்தங்களில் பல திருவடிவங்களை நாம் அறிவோம் என்றாலும் வைவாகிகர், விஷபாகரணர், ஏகபாதர், காமாரி ஆகிய தெய்வ மூர்த்தங்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விவரம் அறிந்த அன்பர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.