ஆறெழுத்து மந்திரம்!
ADDED :3272 days ago
சிவனாருக்கு உரியது பஞ்சாட்சர மந்திரம், மகாவிஷ்ணுவுக்கு உரியது அஷ்டாட்சரம். அதேபோல் முருகப்பெருமானுக்கு உரியது ஷடாட்சரமாகிய ‘சரவணபவ ’ எனும் ஆறெழுத்து மந்திரமாகும். மனம் நிறைந்த பக்தியோடு இந்த மந்திரத்தைப் பிரயோகிக்கும் முறைகளையும் பயனையும் தெரிந்துகொள்வோமா?
சரஹணபவ - இப்படிச் சொல்லி, தொடர்ந்து ஜபித்துவர சர்வ வசியம் உண்டாகும்.
ரஹணபவச - செல்வமும் செல்வாக்கும் பெருகும்.
ஹணபவசர - பகையும் பிணிகளும் நீங்கும்.
ணபவசரஹ - எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.
பவசரஹண - சகல உயிர்களும் நம்மை விரும்பும்.
வசரஹணப - எதிரிகளின் சதி, அவர்களால் உண்டாகும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.