உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத் திருநாளில்....

தீபத் திருநாளில்....

சிவபிரான் முப்புரம் எரித்த திருநாள், திருமால் வாமனராகத் தோன்றி மகாபலியை அமிழ்த்திய நாள், அம்பிகை வாமபாகம் பெற்ற நாள், யார் பெரியவர் என்று போட்டிப் போட்டவருக்கு இடையே ஜோதி சொரூபம் தோன்றிய நாள்... இப்படி மகத்துவங்கள் பல கொண்ட கார்த்திகை தீபத் திருவிழாவே இந்தத் தலத்தின் சிறப்புமிக்க பெருவிழா. விழாவின் 10ம் நாள் தீபத் திருவிழா, அன்று அதிகாலையில் சந்திரனும் பரணி நட்சத்திரமும் இணைந்திருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் சன்னிதியில் கற்பூர தீபம் முதலில் ஏற்றப்படும். பின்னர், அதிலிருந்து ஐந்தைந்தாக நெய் தீபம் ஏற்றப்படும். பின்னர் அவற்றிலிருந்து பல்வேறு சன்னிதிகளின் தீபங்களும் ஏற்றப்படும். இறைவன் ஒன்றாக  ஒருவனாக இருந்து, பின்னர் பஞ்சபூதங்களாகி பலவாறாகக் காட்சி கொடுப்பதை உணர்த்துவதற்காக இந்த ஏற்பாடு. மாலையில், முதலில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபர்களாக காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் வேணுகோபாலன் சன்னிதிக்கு அருகிலிருந்து புறப்பட்டு ஆடிக்கொண்டே அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர், பஞ்ச மூர்த்திகளை நெருங்கியதும் வந்த வேகத்திலேயே உள்ளே செல்ல... அவரது தரிசனம் கிட்டிய தருணம். மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந்தீபத்தை ஏற்றுகின்றனர். ஆறடி உயரமான கொப்பரையில் மலைமீது ஏற்றப்படும் தீபம், மகாதீபமாகத் தொடர்ந்து 11 நாள்கள் எரியும்.

அண்ணா என்பதற்கு அணுக இயலாத என்று விளக்கம் தருவார்கள் பெரியோர்கள் உள்ளத்தில் அன்பும் பக்தியுமின்றி எவராலும் அணுக இயலாத மலை என்பதால் அண்ணாமலை அங்கு அருளும் ஈசன் அண்ணாமலையார், கல்வெட்டுகளில் திருவண்ணாமலை ஆண்டார். திருவண்ணாமலை மகா தேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அருணாசலேஸ்வரர் சன்னிதி முன் உள்ள நந்தியெம்பெருமான் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளார். இதே போல் மலையைச் சுற்றி உள்ள அஷ்ட லிங்கங்களின் முன் உள்ள நந்திகளும் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன. கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும், லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி ‘திருவண்ணாமலை ’ என்று ரமண மகரிஷியிடம் ஆசி பெற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால் பிரண்டன், (Mஞுண்ண்ச்ஞ்ஞு ஊணூணிட் அணூதணச்ஞிடச்டூச்) என்ற நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !