இடுக்குப் பிள்ளையார்!
அண்ணாமலையில் அடிக்கொரு சிவலிங்கம் என்பார்கள்; மலை வலப் பாதையில் அடிக்கொரு கோயில் என்றும் சொல்லலாம். குபேர லிங்கத்துக்கு அருகிலுள்ள இடுக்குப் பிள்ளையார் கோயில் வெகு பிரசித்தம். பிள்ளைப்பேறு வேண்டி இங்கு வருபவர்கள் ஏராளம். இந்த சன்னிதிக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. அதென்ன... தெரிந்து கொள்ள இங்கேயுள்ள (ஞிகீ இOஈஉ)ஸ்கேன் செய்து தரிசியுங்களேன்! 1949 ம் ஆண்டு ஜனவரியில் இந்திய அறிவியல் கழகக் கூட்டம் நடந்தபோது, ‘இமயமலையைவிட திருவண்ணாமலை பழைமையானது’ என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் டாக்டர் பீர்பால் சகானி என்ற புவியியல் அறிஞர். இங்குள்ள சாசனங்கள் தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அருணாசலத்தைப் பற்றிச் சுமார் 52 புராதன நூல்கள் உள்ளன.
திருவண்ணாமலை கோயில்க் கட்டுமானப் பணி வளர்ச்சி என்பது கி.பி. 871 முதல் கி.பி. 1505 வரை அடைந்துள்ளது. அதாவது, சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை. கார்த்திகைத் திருநாளில் நெற்பொரியுடன் வெல்லப் பாகும். தேங்காய்த் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப் பொரி... திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் கொடைத்தன்மை. கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து, சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் எனும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன என்கிறார்கள்.