உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: தங்க பூத வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: தங்க பூத வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை:   திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் மூன்றாம் நாளில் (நவ.25) காலை உற்சவத்தில் தங்க பூத வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் மூன்றாம் நாளில் (நவ.25) காலை உற்சவத்தில் தங்க பூத வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  கோயிலில் உலக நன்மைக்காக சுவாமி சன்னதி முன் 1008 சங்கு அபிஷேக  சிறப்பு பூஜை நடந்தது.  ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தீப விழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் வேதபாடங்களை படித்த சிவாசாரியார்கள். கோவில் தங்க கொடிமரம்  அருகே பிராத்தனை  உண்டியல் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !