உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்றும் நலமுடன் வாழ....

என்றும் நலமுடன் வாழ....

சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. டாக்டரும் நோயாளிக்கு உணவுக்கட்டுப்பாடு விதிப்பார். இந்த நடைமுறை வேத காலத்திலேயே இருந்தது. வேதத்தில், யோ புங்தே அஹமேவ பங்தே என்ற ஸ்லோகம் இருக்கிறது. இதற்கு யார் என்னை அதிகம் சாப்பிடுகிறானோ அவனை நான் சாப்பிடுகிறேன் என்பது பொருள். அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுங்கள். தினமும் காலையில் நீராடியதும் இஷ்ட தெய்வத்தின் ஸ்லோகம், பாடல்களை உரக்கச் சொல்லுங்கள். கடவுளுக்கு மானசீகமாக உணவை நைவேத்யம் செய்து, பிரசாதமாக உண்ணுங்கள். என்றும் நலமுடன் வாழ  இதுவே சிறந்த வழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !